search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவ முகாம்"

    • முகாமை பொன்னேரி முன்னாள் எம். எல். ஏ. சிறுனியம் பலராமன் துவக்கி வைத்தார்.
    • பல்வேறு நோய்களுக்கு இலவசமாக பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    பொன்னேரி:

    பொன்னேரி நகர அனைத்து வியாபாரி கள் சங்கம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட் சிட்டி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ மனை இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம் பொன்னேரியில் வியாபாரிகள் சங்க தலைவர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொது மருத்துவம், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இ.சி.ஜி., பெண்கள், குழந்தைகளுக்கான மருத்துவம், கண், மூக்கு, காது, தொண்டை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு இலவசமாக பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    முகாமை பொன்னேரி முன்னாள் எம். எல். ஏ. சிறுனியம் பலராமன் துவக்கி வைத்தார். முகாமில் பொது செயலாளர் அப்துல் காதர், பொருளாளர் பிரகாஷ் சர்மா, மருத்துவமனை துணைவேந்தர் டாக்டர் நாராயண பாபு, மருத்துவ கண்காணிப்பாளர் முனியப்பன் , பொன்னேரி காவல் ஆய்வாளர் வடிவேலு முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்களுக்கு பற்களை பரிசோதனை செய்து தேவைப்படுபவர்களுக்கு மாத்திரைகள் இலவசமாக வழங்கி சிகிச்சை அளித்தார்கள்.
    • நிகழ்ச்சியில் பள்ளியில் தலைமை ஆசிரியர் செல்வி மற்றும் ஆசிரியர்களும், அரிமா சங்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

    வாலாஜாபாத்:

    அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உடல் நலம் குறித்த பரிசோதனைகளை மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி வாலாஜாபாத் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலை பள்ளியில் பயிலும் 500 மாணவர்களுக்கு வாலாஜாபாத்தில் செயல்படும் அரிமா சங்கம் மற்றும் அஞ்சலாட்சி பல் ஆஸ்பத்திரி இணைந்து பல் பரிசோதனை முகாமை நடத்தியது. முகாமில் பல் மருத்துவ சிகிச்சை சிறப்பு டாக்டர் ஆச்சியப்பன் தலைமையில் பல் மருத்துவர்கள் கலந்துகொண்டு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பற்களை பரிசோதனை செய்து தேவைப்படுபவர்களுக்கு மாத்திரைகள், பற்பசை போன்றவற்றை இலவசமாக வழங்கி சிகிச்சை அளித்தார்கள்.

    நிகழ்ச்சியில் பள்ளியில் தலைமை ஆசிரியர் செல்வி மற்றும் ஆசிரியர்களும், அரிமா சங்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

    • ஊராட்சி ஒன்றிய பகுதியில் கால்நடை மருத்துவ முகாம்கள் நடக்கிறது.
    • கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் நடப்பாண்டிற்கும் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் 20 முகாம்கள் வீதம் மொத்தம் 220 சிறப்பு கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்பு ணர்வு முகாம்கள் நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அதன்படி அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் குல்லூர்சந்தை கிராமத்தில் கலெக்டரால் முகாம் துவக்கி வைக்கப்பட்டது. இந்த முகாம் நடைபெறும் இடம், தேதி, கலந்து கொள்ளும் மருத்துவக்குழு வினர் ஆகிய விவரங்கள் முன்கூட்டியே அந்த ஊராட்சி பகுதியிலுள்ள விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும்.

    நிகழ்ச்சி தொடர்பாக துண்டுபிரசுரங்கள் மற்றும் ஒலிபெருக்கிகள் மூலம் விளம்பரம் மற்றும் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்ட பின்னர் குறிப்பிட்ட நாளில் உள்ளாட்சி அமைப்பு பிரதி நிதிகள் முன்னிலையில் முகாம்கள் நடைபெறும்.

    அப்போது கால்நடை மருந்தகத்தில் செய்யப்படும் சேவைகளான சிகிச்சை, குடற்புழுநீக்கம், ஆண்மை நீக்கம், மலடுநீக்க சிகிச்சை, தடுப்பூசிப்பணி, கே.சி.சி. விண்ணப்பங்கள் பெறுதல் ஆகிய பணிகள் அந்தந்த ஊராட்சி பகுதியில் மேற் கொள்ளப்படும். அனைத்து பணிகளும் இலவசமாக வழங்கப்படுகிறது.

    கலந்து கொள்ளும் கால்நடைகளுக்கு இலவச மாக தாதுஉப்பு கலவை ஒரு கிலோ எடையுள்ள சத்து பவுடர் ஒவ்வோர் முகாம்க ளிலும் வழங்கப்படும். கால்நடை வளர்ப்போருக்கு தேவையான தீவனபுல் விதைகள் மற்றும் நாற்று களை விவசாயிகள் தங்க ளது பெயர்களை பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.

    சிறந்த முறையில் கால்நடை பராமரிப்பினை மேற்கொள்ளும் பண்ணை யாளர்களை தேர்வு செய்து 3 பேருக்கு ஊக்கப்பரிசுகளும் வழங்கப்படும். எனவே முகாம்கள் நடைபெறும் போது அப்பகுதி கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் மற்றும் விலங்கின ஆர்வ லர்கள் கலந்து கொண்டு தங்கள் கால்நடைகளை அழைத்துவந்து பயன் பெற்று கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    • மத்திய சிறையில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
    • 250 கைதிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    மதுரை

    முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை மத்திய சிறையில் யாதவா மகளிர் கலைக்கல்லூரி மற்றும் இந்திய பல் மருத்துவ சங்க மதுரை கிளை மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து சிறப்பு பல் மருத்துவ முகாம் நடந்தது.

    முகாமை மதுரை சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி, மத்திய சிறை கண்காணிப்பாளர் பரசுராமன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    மதுரை மத்திய சிறை மற்றும் பெண்கள் தனிச் சிறையில் நடைபெற்ற பல் மருத்துவமுகாமில் 250 கைதிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    • ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் முத்துகாளிப்பட்டி ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • கலெக்டர் உமா தலைமை தாங்கினார். ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி. முன்னிலை வகித்தார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் முத்துகாளிப்பட்டி ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை தாங்கினார். ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி. முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினராக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் சிறந்த கன்றுகள், சிறந்த கால்நடை பராமரிப்புக்கான பரிசுகள், கால்நடை வளர்ப்பவர்களுக்கு தீவன புல் கரணைகள், தாது உப்பு கலவைகள் ஆகியவற்றை அமைச்சர் மதிவேந்தன் பயனாளிகளுக்கு வழங்கினார்.

    முகாமை தொடங்கி வைத்து அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவ வசதி கிடைக்கப் பெறாத தொலைதூர உட்கிராமங்களில் பொதுமக்களுக்கு கால்நடை வசதி கிடைக்கும் வகையில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாமை முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், ஆண்மை நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், செயற்கை முறை கருவூட்டல் செய்தல், மலடு நீக்க சிகிச்சை செய்தல், சினை பரிசோதனை செய்தல், சிறு அறுவை சிகிச்சைகள், தாது உப்பு கலவை வழங்குதல், சிறு கண்காட்சி, சிறந்த கால்நடை வளர்ப்பு முறை பின்பற்றும் விவசாயிகளுக்கு விருது மற்றும் கன்றுகளுக்கு பரிசு வழங்குதல், சுகாதார நடவடிக்கைகள், கால்நடை வளர்ப்பு பற்றிய தொழில்நுட்ப வல்லுனர்களுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் நடைபெற உள்ளது.

    மாவட்டத்தில் 300 முகாம்கள்

    2023-2024-ம் நிதியாண்டில் நாமக்கல் மண்டலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத்திற்கு 20 முகாம்கள் வீதம் நாமக்கல் மாவட்டத்தில் 300 முகாம்கள் நடத்தப்பட உள்ளது. எனவே கால்நடை முகாம் நடைபெறும்போது கிராம மக்கள் தங்களது கால்நடைகளை கொண்டு வந்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    முகாமில் ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கே.பி.ஜெகநாதன், ஒன்றிய கவுன்சிலர் ஏ.கே.பாலச்சந்திரன், முத்துக்காளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அருள், கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் செல்வராஜ், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குனர் நடராஜன், துணை இயக்குனர் அருண் பாலாஜி, உதவி இயக்குனர்கள் மருதுபாண்டி, முருகேசன், மற்றும் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், கல்லூரி பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிகிச்சைகள் வழங்கினர்
    • சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்

    புதுப்பாளையம்:

    செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் வட்டார வள மையத்தில் மாற்றுத்திறன் உடைய குழந்தைகளுக்கு மருத்துவ முகாம் நடந்தது.

    முகாமிற்கு புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார்.

    இதில் திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவர் சாந்தகுமார் உள்பட மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பரிசோதனைகள், ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் வழங்கினர். பள்ளி கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • விருதுநகர் அருகே அக்குபஞ்சர் மருத்துவ முகாம் நடந்தது.
    • பெண்கள் பிரச்சினைகளுக்கான சிறப்பு மருத்துவர் பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கினர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் துரைச்சாமிபுரம் நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்க வளாகத்தில் இலவச அக்குபஞ்சர் மற்றும் டெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு ராஜபாளையம் நகர்மன்ற உறுப்பினர், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் சுமதி ராமமூர்த்தி தலைமை தாங்கினார். நாட்டாண்மைகள் குருசுப்ரமணியன், குருபாக்கியம், ராமசுப்பிர மணியன் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் மாடசாமி வரவேற்றார். காளிமுத்து, பசுபதி ராமநாதன் வாழ்த்தி பேசினார்கள். உலக தமிழ்ச் சங்க தலைவர் நிலவழகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கமிட்டி உறுப்பினர்கள் ஆனந்தராஜ், சுந்தர்ராஜ், லட்சுமணகுமார், கதிர்வேல், சித்தா மருத்துவ உதவியாளர் சரவணன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். மதுரை இயற்கை அக்குபஞ்சர் மருத்துவர் ஜெயக்குமார் ஜெயலட்சுமி, லிங்கா, தோல் நோய் மருத்துவர் முத்துலட்சுமி, சர்க்கரை நோய் மூட்டு வலி பெண்கள் பிரச்சினைகளுக்கான சிறப்பு மருத்துவர் கனகதுர்க்கா லட்சுமி ஆகியோர் பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கினர்.

    • சென்னிமலையில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
    • குழந்தைகள் இலவச மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம்.

    சென்னிமலை:

    ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் சென்னிமலை அடுத்துள்ள அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி வளாகத்தில் நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ளது.

    இம்மருத்துவ முகாமில் கை, கால் இயக்க குறைபாடு, மன நல குறைபாடு, காது, மூக்கு, தொண்டை மற்றும் பார்வை குறைபாடு உடைய பிறந்த குழந்தை 18 வயது வரை உள்ள குழந்தைகள் கலந்து கொண்டு இலவச மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம்.

    இம்முகாமில் தேசிய அடையாள அட்டை, இலவச உதவி உபகரணங்கள், இலவச அறுவை சிகிச்சை போன்ற வற்றுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது.

    மேலும் இம்மருத்துவ முகாமில் அனைத்து வகையான மாற்றுத்திறனாளி மாணவர்களும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு சென்னிமலை வட்டார வள மையம் மேற்பார்வையாளர் கோபிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வேதியியல் துறை சார்பாக சுகாதார விழிப்புணர்வு முகாம் தளவா பாளையத்தில் நடைபெற்றது.
    • முகாமிற்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் துணைக் குழு உறுப்பினரும், அரசு கல்வி நிறுவனங்களின் தலைவருமான நடேசன் தலைமை தாங்கினார்.

    பரமத்திவேலூர்:

    கரூர் மாவட்டம் மன்மங்கலம் அருகே பண்டுதகாரன் புதூர் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வேதியியல் துறை சார்பாக சுகாதார விழிப்புணர்வு முகாம் தளவா பாளையத்தில் நடைபெற்றது.

    முகாமிற்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் துணைக் குழு உறுப்பினரும், அரசு கல்வி நிறுவனங்களின் தலைவருமான நடேசன் தலைமை தாங்கினார். கல்வி நிறுவனங்களின் தாளாளர் கோதை நடேசன், செயலாளர் என்ஜினீயர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் ஷாலினி பிரியா மற்றும் டாக்டர் கோகுல கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு தளவாபாளையம் கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர். இந்த முகாமில் வேதியியல் துறை தலைவர் சாந்தி வரவேற்றார். பேராசிரியர்கள் செவ்வந்தி, கவிபிரியா, முதுகலை முதலாம் ஆண்டு மற்றும் இளங்கலை 3-ம் ஆண்டு மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • மதுரை அருகே இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
    • இம்முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

    மதுரை

    கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரி அரைஸ் விரிவாக்கத்துறை மற்றும் செல்லம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து மழைகாலங்களில் நோய் பரவுவதை தடுக்க இலவச பொது மருத்துவ முகாம் நத்தப்பட்டி, வடக்கம்பட்டி, புள்ளநேரி கிராமங்களில் நடைபெற்றது. வடக்கம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமிற்கு கல்லூரி முதல்வர் அன்பரசு தலைமை வகித்தார். அரைஸ் விரி வாக்கத்துறை ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் வரவேற்றார். கணிதவியல் துறைத் தலை வர் ராபர்ட் திலீபன், அரசு கள்ளர் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சாம்ராஜ் ஆகியோர் வாழ்த்தி வழங்கினர். கணிதவியல் துறை பேராசிரியர் சஜன் ஜோசப் நன்றி கூறினார்.

    நத்தப்பட்டி முகாமில் கல்லூரி துணை முதல்வர் துரைசிங்கம், பொருளாதாரத்துறை தலைவர் ஜெய ராஜ், கோவிலாங்குளம் ஊராட்சி செயலர் ஜெயபால், பொருளாதாரத்துறை பேராசிரியர் நந்தக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

    புள்ளநேரி கிராமத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் கல்லூரி துணை முதல்வர் இன்னாசி ஜான், புள்ள நேரி ஊராட்சி மன்றத் தலைவர் மாயாண்டி, ஊரக வியல்துறைத் தலைவர் அம்புதாஸ் அரவிந்த் ஆகி யோர் பங்கேற்றனர். ஊரக வியல்துறை பேராசிரியர் அடைக்கலராஜ் நன்றி கூறினார்.

    நத்தப்பட்டி முகாமில் செல்லம்பட்டி வட்டார மருத்துவர் பாண்டியராஜன் தலைமையிலும், வடக்கம்பட்டி, புள்ளநேரி கிராமங்களில் மருத்துவர்கள் சாந்தினி, பிரியா தலைமையிலான குழுவினர்கள் பொது மக்களுக்கு காய்ச்சல், சளி, சர்க்கரை, ரத்த அழுத்தம் குறித்து பொது மக்களை பரிசோதித்து ஆலோசனைகளை வழங்கினர். இம்முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

    • வாடிப்பட்டி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் மருத்துவ முகாம் நடந்தது.
    • உதவி சுகாதார பணி மேற்பார்வையாளர் முத்துகுமார் நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்வழங்கல் துறை பேரூ ராட்சிகளின் இயக்ககம் சார்பாக தூய்மைப் பணியா ளர்கள் மேம்பாட்டுத்திட்டத் தின் கீழ் வாடிப்பட்டி பேரூ ராட்சியில் உள்ள முக்கிய தூய்மை பணியாளர்களை அடையாளம் காணும் கணக் கெடுப்பு பயிற்சியும் மருத் துவ முகாமும் நடந்தது.

    இந்த பயிற்சிமுகாமிற்கு பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேனி, பேரூராட்சி துணைத்தலைவர் கார்த்திக், கவுன்சிலர் ஜெயகாந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூய்மை பணி மேற்பார்வையாளர் முத்தழகு வரவேற்றார்.

    இந்த முகாமில் தூய்மை பணியாளர்களுக்கான மாதிரி பேரூராட்சிபயிற்றுநர் எபிநேசகென்னடி பயிற்சி யளித்தார். அதன்பின் நடந்த மருத்துவமுகாமில் கச்சை கட்டி அரசுமருத்துவமணை மருத்துவர் செல்வி தலைமை யில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்து ராஜ், சுகாதாரஆய்வாளர்கள் ராமகிருஷ்ணன், இனிய குமார், சதீஸ் ஆகியோர் பேரூராட்சி பணியாளர் களுக்கு மருத்துவ பரிசோத னை செய்தனர். முடிவில் உதவி சுகாதார பணி மேற் பார்வையாளர் முத்துகுமார் நன்றி கூறினார்.

    • மாணவர்களுக்கான மருத்துவ முகாம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் நடந்தது.
    • முகாமில் வாலாஜாபாத் ஒன்றிய பெருந்தலைவர், வட்டார ஒருங்கிணைப்பாளர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    காஞ்சிபுரம்:

    வாலாஜாபாத் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 18 வயது வரையிலான மாற்றுதிறன் கொண்ட மாணவர்களுக்கான மருத்துவ முகாம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் நடந்தது.

    முகாமில் வாலாஜாபாத் ஒன்றிய பெருந்தலைவர் தேவேந்திரன், துணைத் தலைவர் சேகர், பேரூராட்சி துணைத் தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி, மாவட்ட உதவி திட்ட அலுவலர் தனசேகர், வாலாஜாபாத் மேற்பார்வையாளர் குணசேகரன், பள்ளி தலைமை ஆசிரியை சொர்ணலட்சுமி, வட்டார கல்வி அலுவலர்கள் நந்தாபாய், அசோக்குமார், வட்டார ஒருங்கிணைப்பாளர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×